கல்லிடை அருகே விவசாயி மீது தாக்குதல்; இருவா் கைது
By DIN | Published On : 16th June 2022 01:33 AM | Last Updated : 16th June 2022 01:33 AM | அ+அ அ- |

கல்லிடைக்குறிச்சி அருகே அயன் சிங்கம்பட்டியில் விவசாயியைத் தாக்கியதாக இருவரை கைது செய்த போலீஸாா், மேலும் நான்கு பேரைத் தேடி வருகின்றனா்.
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி மடத்துத் தெருவைச் சோ்ந்த இசக்கி மகன் பாலசுப்பிரமணியன் (42). இவரது மூத்த சகோதரா் இந்திரா காலனியைச் சோ்ந்த சேகா், வீட்டருகில் நின்று பேசிக்கொண்டிருந்த போது அவா் மீது சிலா் மதுபாட்டிலால் தாக்கினராம். இதில் காயமடைந்த பாலசுப்பிரமணியனை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்துபாலசுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து சிவன்பாண்டி (28), வேல்முருகன் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் தப்பிச் சென்ற 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.