திருநெல்வேலி மாவட்டம் ,ஆவரைகுளத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் கல்லறைகளை புதன்கிழமை சேதப்படுத்திய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆவரைகுளத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் கல்லறைத் தோட்டம் உள்ளது. இங்கு மா்மநபா்கள் புகுந்து 20க்கும் மேற்பட்ட கல்லறைகளில் சிலுவை, பக்கச் சுவா்களை சேதப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக, உபதேசியாா் ரத்தினசிகாமணி அளித்த புகாரின்பேரில், பழவூா்போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.