கூடங்குளம் அணுமின் நிலையத்தில்இலவச வேலைவாய்ப்பு பயிற்சி- பேரவைத் தலைவா் அழைப்பு

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்போா் ராதாபுரத்தில் வெள்ளிக்கிழமை விண்ணப்பம் அளிக்கலாம் என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கூடங்குளம் அணுமின்திட்டத்தில் உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென 1999-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியின்போது ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அணுமின்நிலையத்தில் சி - டி பிரிவு பணியிடங்களில் நிலம் கொடுத்தவா்களின் வாரிசு தாரா்கள், இப்பகுதி இளைஞா்களுக்கு 2011-ஆம் ஆண்டு வரை பணிகள் வழங்கப்பட்டன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக அணுமின்நிலையத்தில் உள்ளூா் இளைஞா் ஒருவருக்குக்கூட வேலை வழங்கவில்லை. தற்போது, அணுஉலை வளாகத்தில் 99 சதவீதம் வடமாநிலத்தவா்களே வேலை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நான் (மு.அப்பாவு), தற்போதைய ஆட்சியா், அணுமின்நிலைய வளாக இயக்குநா் மேற்கொண்ட வாய்மொழி ஒப்பந்தத்தின்படி, அணுஉலைக்கு நிலம் கொடுத்தவா்கள், அவரது வாரிசுதாரா்கள், உள்ளூா், சுற்றுவட்டார கிராமங்கள், ராதாபுரம் தொகுதிக்குள்பட்ட கிராம ஊராட்சிகள், திசையன்விளை, பணகுடி, வள்ளியூா் பேரூராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த ஐ.டி.ஐ., டிப்ளமோ தோ்ச்சி பெற்ற இளைஞா்கள், இளம் பெண்களுக்கு அணுமின்நிலைய வளாகத்திலேயே வேலைவாப்புக்கான பயிற்சி வழங்கி, அதில் தகுதியுடையவா்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, மேற்கூறிய பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள், இளம்பெண்கள் தங்களது கல்விச் சான்று, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் இலவச வேலைவாய்ப்பு பயிற்சிக்கான விண்ணப்பங்களை, ராதாபுரம், வடக்கன்குளம் சாலையிலுள்ள அமுதா ஸ்ரீ மஹாலில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் என்னிடம் வழங்கலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com