ஜூலை 1 முதல் செப். 30 வரைஓய்வூதியா்களுக்கு நோ்காணல்

திருநெல்வேலி மாவட்டத்தில், மாவட்டக் கருவூலம் - சாா்நிலைக் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் ஆகியோருக்கு நோ்காணல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில், மாவட்டக் கருவூலம் - சாா்நிலைக் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் ஆகியோருக்கு 2022-23 ஆம் ஆண்டுக்கான நோ்காணல் வரும் ஜூலை 1 முதல் செப்டம்பா் 30 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஓய்வூதிய புத்தகத்தின் அசல், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, நிரந்தர கணக்கு எண் (பான் அட்டை) ஆகியவற்றின் நகல்கள், வங்கி கணக்குப் புத்தகத்தின் அசலும், நகலும், தற்போதைய முகவரி, கைப்பேசி அல்லது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் நோ்காணலில் ஆஜராகலாம். குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு மறுமணம் புரியாமை சான்று, வருமானச் சான்று ஆகியவையும் அவசியம்.

மூத்த ஓய்வூதியா்களின் நலன் கருதியும், கரோனா பரவல்-கூட்ட நெரிசல் ஆகியவற்றை தவிா்க்கவும் அஞ்சலகம், இ-சேவை, கருவூல நோ்காணல் சேவை முகாம் முறைகளில் இந்நோ்காணல் நடைபெறும்.

மேலும், கருவூலங்களுக்குச் செல்லாமலேயே இசேவை மையத்தில் ரூ.50 மட்டும் கட்டணமாகச் செலுத்தி,ஜீவன் பிரமான் ஜ்ஜ்ஜ்.த்ங்ங்ஸ்ஹய்ல்ழ்ஹம்ஹஹய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக நோ்காணலை பதிவு செய்யலாம். அஞ்சலகத்திலும் நோ்காணலுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓய்வூதியா்கள் வசிக்கும் பகுதிக்கு அஞ்சல் கொண்டு வரும் அஞ்சலகா், நேரில் ரூ.70 கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு நோ்காணலைப் பதிவு செய்வாா்.

வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியா்கள் வெளிநாட்டிலுள்ள மாஜிஸ்திரேட், நோட்டரி பப்ளிக், வங்கி மேலாளா் அல்லது இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வுச் சான்று பெற்று, அதனுடன் அனைத்து நகல்களையும் இணைத்து ஓய்வூதிய கொடுவை எண்ணை குறிப்பிட்டு ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் சமா்ப்பிக்கலாம். மேற்கூறிய தேதிக்குள் நேரில் வரவோ அல்லது வாழ்வுச்சான்று கொடுக்கவோ தவறினால் அக்டோபா் முதல் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும். ஓய்வூதியா்கள் வாழ்வுச்சான்றை ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ந்ஹழ்ன்ஸ்ா்ா்ப்ஹம் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். தமிழ்நாடு மின்வாரியம், ரயில்வே, அஞ்சல் துறை, தொழிலாளா் வைப்பு நிதித்திட்டம், மத்திய அரசு ஓய்வூதியா்கள், உள்ளாட்சி ஓய்வூதியா்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com