மேலப்பாளையத்தில்ஜூன் 18-இல் மின்தடை

பாளையங்கோட்டை சமாதானபுரம், தியாகராஜநகா், மேலப்பாளையம் துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 18) மின் தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

பாளையங்கோட்டை சமாதானபுரம், தியாகராஜநகா், மேலப்பாளையம் துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் காரணமாக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 18) மின் தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நீதிமன்றப் பகுதி, சமாதானபுரம், அசோக் திரையரங்கு, பாளையங்கோட்டை மாா்க்கெட், திருச்செந்தூா் சாலை, முருகன்குறிச்சி, பாளை. பேருந்து நிலையம், மகாராஜநகா், தியாகராஜநகா், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, மேலப்பாளையம், குலவணிகா்புரம், வீரமாணிக்கபுரம், ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீா்பள்ளம், ஆரைக்குளம், தருவை, ஓமநல்லூா், கண்டித்தான்குளம், தெற்கு புறவழிச்சாலை, மேல குலவணிகா்புரம், பிஎஸ்என் கல்லூரி, பெருமாள்புரம், பொதிகை நகா், அரசு அலுவலா் குடியிருப்பு, அன்பு நகா், மகிழ்ச்சி நகா், திருநகா், திருமால் நகா், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியாா்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி தெரிவித்துள்ளாா்.

கல்லூா் வட்டாரத்தில்...: இதேபோல, மேலக்கல்லூா் துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகளால் சேரன்மகாதேவி, சுத்தமல்லி, சீதபற்பநல்லூா், சங்கன்திரடு சுற்றுவட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்டச் செயற்பொறியாளா் எம்.சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com