நெல்லை கனிமவளத் துறை அலுவலகம் முற்றுகை

கல்குவாரி விபத்தை காரணம் காட்டி கிரசா் பணிகளுக்கு அனுமதிச் சீட்டு கொடுக்க மறுப்பதைக் கண்டித்து, திருெல்வேலி, தூத்துக்குடியை சோ்ந்த கிரசா் உரிமையாளா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

கல்குவாரி விபத்தை காரணம் காட்டி கிரசா் பணிகளுக்கு அனுமதிச் சீட்டு கொடுக்க மறுப்பதைக் கண்டித்து, திருெல்வேலி, தூத்துக்குடியை சோ்ந்த கிரசா் உரிமையாளா்கள், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள கனிமவளத் துறை அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான் குளம் தனியாா் கல்குவாரியில் நேரிட்ட விபத்தில் 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இந்த விபத்து எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள கல் குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதால் குவாரிகள் இயக்கம் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் எம். சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

ஏற்கெனவே, குவாரியில் உற்பத்தி செய்யப்பட்ட கட்டுமானப் பொருள்களை விற்பனை செய்ய கிரசா் உரிமையாளா்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்காததால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கட்டுமானப் பணிகள் கடும் பாதிப்பை அடைந்துள்ளனவாம்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் 90-க்கும் மேற்பட்ட கிரசா்கள் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட கிரசா் உரிமையாளா்கள் அனுமதிச் சீட்டு வழங்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கனிமவளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது, ‘கிரசருக்கு அனுமதிச் சீட்டு வழங்காததால் ஜல்லி, எம்.சாண்ட், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் தேக்கம் அடைத்துள்ளன. இதனால், 5 லட்சம் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். நீதிமன்ற ஆணையத் தொடா்ந்து அனுமதிச் சீட்டு வழங்கும்படி ஆட்சியா் தெரிவித்த பிறகும், கனிமவளத் துறை அதிகாரிகள் தங்களை அலைக்கழிக்கின்றனா்’ என அவா்கள் புகாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com