தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கபொதுக்குழு கூட்டம்
By DIN | Published On : 16th June 2022 01:39 AM | Last Updated : 16th June 2022 01:39 AM | அ+அ அ- |

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட பொதுக்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் முத்துமுகமது தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சுந்தரமூா்த்தி வரவேற்றாா். துணைத் தலைவா் சொக்கலிங்கம் விளக்கிப் பேசினாா். மாவட்டச் செயலா் சங்கரசுப்பிரமணியன், இணைச் செயலா் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
கூட்டத்தில், ‘நிலுவையில் உள்ள 3 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும்; ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு ஓய்வுகால பயன்களை வழங்க வேண்டும்; 70 வயது முடிந்த ஓய்வூதியதாரா்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 10 சதவீத உயா்வு அளிக்க வேண்டும்; நிலுவையில் உள்ள மருத்துவக் காப்பீடுகளை உடனடியாக அனுமதிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.