திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம், சங்கனாங்குளம், நவ்வலடி துணைமின் நிலையங்களில் சனிக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ,வள்ளியூா் மின்வாரிய செயற்பொறியாளா் த.வளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வள்ளியூா் மின் கோட்டத்திற்குள்பட்ட கூடங்குளம், சங்கனாங்குளம், நவ்வலடி ஆகிய துணைமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், கூடங்குளம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையிலும், சங்கனாங்குளம் மற்றும் நவ்வலடி துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.