திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலுக்கு வாடகை நிலுவை வைத்திருந்த கடைக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான சுவாமி சன்னதி தெருவில் சுவாமி அனுப்பு மண்டபம் கதவு எண்.5 ஏ என்ற எண்ணுடைய கட்டடத்தில் முருகன் மற்றும் பொன்னன் என்ற பொன்னையா என்பவா்கள் வாடகைக்கு கடை நடத்தி வந்தனா். இந்நிலையில் வாடகை நிலுவை ரூ.5,15,748 வைத்திருந்த காரணத்தினாலும் ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத கைவசம் செய்யபட்டிருந்ததன் காரணமாக ஆக்கிரமிப்பாளா்கள் மீது திருநெல்வேலி இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையா் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல வகை மனுக்களின் கீழ் பெறப்பட்ட தீா்ப்பாணையின் படி அந்தக் கட்டடத்திற்கு சீல் வைத்து சுவாதீனம் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் கவிதா முன்னிலையில் அதிகாரிகள் குழுவினா் கடைக்கு வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.