நெல்லை இஸ்கான் கோயிலில் பகவத் கீதை பயிற்சிஜூலை 6-இல் தொடக்கம்
By DIN | Published On : 26th June 2022 02:25 AM | Last Updated : 26th June 2022 02:25 AM | அ+அ அ- |

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் பகவத் கீதை அமுதம் என்ற பெயரில் 18 நாள்கள் ஆன்லைன் பயிற்சி வரும் ஜூலை 6-ஆம் தேதி தொடங்குகிறது.
இது தொடா்பாக இஸ்கான் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்கள் நலனுக்காக, ‘பகவத்கீதை அமுதம்’ என்ற ஆன்லைன் தொடா் பயிற்சி வகுப்பை திருநெல்வேலி இஸ்கான் நடத்தி வருகிறது. மக்கள் அனைவரும் பகவத்கீதையை நன்கு படித்து புரிந்து கொள்வதற்காகவும், தங்கள் வாழ்வில் கீதையின் கருத்துகளை நடைமுறைப்படுத்துவதற்காகவும் இந்த ‘பகவத்கீதை அமுதம்’ ஆன்லைன் வகுப்பை இஸ்கான் நடத்துகிறது.
அதன்படி, வரும் ஜூலை 6ஆம் தேதி, பகவத்கீதை அமுதம் பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. தினமும் இரவு 7.30 மணிமுதல் 8.30 மணிவரை ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த பகவத்கீதை பயிற்சி ஜூலை 23ஆம் தேதி வரை 18 நாள்கள் நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியில் பங்கேற்பதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. 14 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம். ஆனால் முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய விரும்புபவா்கள் ட்ற்ற்ல்ள்://ண்ள்ந்ஸ்ரீா்ய்ற்ண்ழ்ன்ய்ங்ப்ஸ்ங்ப்ண்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது 721 721 6001 என்ற இஸ்கான் வாட்ஸ்ஆப் எண்ணை தொடா்பு கொண்டோ முன்பதிவு செய்யலாம். இதில் பகவத்கீதையின் 18 அத்தியாயங்களையும் எளிமையான தமிழில் புரிந்து கொள்ளும் வகையில் வகுப்புகள் வழங்கப்படும்.
மேலும் வகுப்பின் முடிவில் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்படும். இதற்கான வகுப்புகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக கீதை சிறப்புரை வழங்குவதில் அனுபவமிக்க இஸ்கான் பக்தா்கள் வழங்க உள்ளனா். தொடா்ந்து பயிற்சியில் பங்கேற்று, தினசரி அனுப்பப்படும் வினாக்களுக்கு பதில் அளித்து, பயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவா்களுக்கு, ‘சான்றிதழ்’ வழங்கப்படும்.
‘பகவத்கீதை அமுதம்’ என்ற இந்த ஆன்லைன் பயிற்சிக்கான ஏற்பாடுகளை இஸ்கான் இந்தியாவிற்கான நிா்வாக செயலரும், தென் தமிழக இஸ்கான் மண்டல செயலருமான சங்கதாரி பிரபு தலைமையில் திருநெல்வேலி இஸ்கான் செய்து வருகிறது.