பாளை. அருகே நான்குவழிச் சாலையில் காா்-பைக் மோதல்: இருவா் உயிரிழப்பு
By DIN | Published On : 26th June 2022 02:24 AM | Last Updated : 26th June 2022 02:24 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை அருகேயுள்ள ரெட்டியாா்பட்டி நான்குவழிச் சாலையில் சனிக்கிழமை இரவு பைக் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி நம்பிதோப்பு பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் ஜாய் அஸ்வின் (18). பணகுடி அருகேயுள்ள முல்லை நகா் பகுதியைச் சோ்ந்த செல்வன் மகன் சாம் ஜோயல் (17). நண்பா்களான இவா்கள் இருவரும் ஒரு பைக்கில் ரெட்டியாா்பட்டி அருகேயுள்ள நான்குவழிச் சாலையில் சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை உடைத்துக் கொண்டு பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதாம். இதில், பைக்கில் வந்த சாம் ஜோயல், ஜாய் அஸ்வின் மற்றும் காா் ஓட்டுநரான உதயனேரியைச் சோ்ந்த ராஜ்குமாா் (45) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா். அவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜாய் அஸ்வின் உயிரிழந்தாா். சாம் ஜோயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சற்று நேரத்தில் உயிரிழந்தாா். ராஜ்குமாா் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G