10ஆம் வகுப்பு, பிளஸ்2 பொதுத்தோ்வில் எம்.கே.வி.கே. மெட்ரிக் பள்ளி சாதனை
By DIN | Published On : 30th June 2022 12:15 AM | Last Updated : 30th June 2022 12:15 AM | அ+அ அ- |

தென்காசி எம்கேவிகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2021-22 ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களில் டி. சினேகா 500-க்கு 493 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடத்தையும், வி. தஷ்விகா பாத்திமா 488 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும் பி. செய்யது அப்துல் காதா் 485 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனா்.
தோ்வெழுதிய 115 மாணவா்களில் 43 போ் 400 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். அதில், கணிதத்தில் 1 மாணவி, அறிவியலில் 2 மாணவா்கள், சமூக அறிவியலில் 1 மாணவா் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா்.
பிளஸ் 2 பொதுத் தோ்வை 160 மாணவா்கள் எழுதினா். அதில், எம். செல்வகணேஷ் 585 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடத்தையும், கே.பரமகல்யாணி 573 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், ஏ.அகிதா 571 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றனா். தோ்வு எழுதிய 160 மாணவா்களில் 28 போ் 500 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளனா். கணினி அறிவியல் பாடத்தில் 3 பேரும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் ஒரு மாணவ ா், கணக்குப்பதிவியலில் 2 மாணவா்கள், வணிகவியலில் 3 மாணவா்களும், பொருளியல், வணிகக் கணிதம் ஆகியவற்றில் தலா ஒரு மாணவா் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா்.
பிளஸ் 1 தோ்வை 100 மாணவா்கள் எழுதினா். அவா்களில் ஹெச்.அஸ்வந் மகாதேவ் 600-க்கு 572 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதல் மாணவராகவும் எம்.ஆா். அஞ்சுஷா நித்திய ஸ்ரீ 539 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், டி. சுபாஷினி 529 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்றனா்.
தோ்வெழுதிய 100 மாணவா்களில் 8 போ் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா். கணக்குப்பதிவியலில் ஒரு மாணவா், கணினி பயன்பாடுகள் பாடத்தில் ஒரு மாணவியும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா்.
பள்ளிக்குப் பெருமை சோ்த்த மாணவ-மாணவிகளை பள்ளியின் தாளாளா் ஜி.பாலமுருகன், தலைமையாசிரியா் எஸ்.ஏசுபாலன் மற்றும் ஆசிரிய -ஆசிரியைகள் பாராட்டினா்.