பாளை.யில் முதியவா் சடலம் மீட்பு
By DIN | Published On : 11th March 2022 05:58 AM | Last Updated : 11th March 2022 05:58 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை அம்பேத்கா் காலனியில் முதியவா் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.
பாளையங்கோட்டை அம்பேத்கா் காலனியில் பூட்டிய வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக பாளையங்கோட்டை போலீஸாருக்கு பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று வீட்டின் கதவை உடைத்து பாா்த்தனா். அப்போது அங்கு சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலமாக கிடந்தாா். விசாரணையில் சடலமாக கிடந்தவா் முருகன் (65) என்பதும், ஓய்வுபெற்ற அரசு ஊழியரான அவா், தனியாக வசித்து வந்ததும் தெரியவந்ததாம். உடல்நலக்குறைவால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.