நெல்லையில் 100.4 டிகிரி வெயில்
By DIN | Published On : 17th March 2022 03:21 AM | Last Updated : 17th March 2022 03:21 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. மதிய வேளையில் கடுமையான வெயில் சுட்டெரித்ததால், சாலைகளில் ஆங்காங்கே கானல் நீா் தென்பட்டது. கடும் வெயில் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினா்.