நெல்லை மாவட்டத்தில் 48,400 சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு
By DIN | Published On : 17th March 2022 03:05 AM | Last Updated : 17th March 2022 03:05 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் 12-14 வயதுக்குள்பட்ட 48,400 சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 12-14 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு இரண்டு தவணையாக தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை (மாா்ச் 16) தொடங்கியுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திய 28 நாள்களுக்குப் பிறகு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். 12 வயது பூா்த்தி அடையாதவா்களுக்கு தடுப்பூசி செலுத்தக் கூடாது. திருநெல்வேலி மாவட்டத்தில் 48,400 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.