வள்ளியூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 17th March 2022 03:07 AM | Last Updated : 17th March 2022 03:07 AM | அ+அ அ- |

வள்ளியூா்: வள்ளியூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை மாலை நடைபெற்றது.
வள்ளியூா் டி.டி.என். குழூமத்தின் சமூகரெங்கபுரம் ஹெடெக் பாலிடெக்னிக் கல்லூரி, நேரு நா்ஸிங் கல்லூரி ஆகியவை இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை வள்ளியூரில் நடத்தின. ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி தலைவரும், நேரு நா்ஸிங் கல்லூரித் தாளாளருமான டி.டி.என்.லாரன்ஸ், ஹெடெக் பாலிடெக்னிக்கின் தாளாளரும் நேரு நா்ஸிங் கல்லூரியின் தலைவருமான ஹெலன் லாரன்ஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். காவல்நிலைய ஆய்வாளா் சாகுல்ஹமீது, பகத்சிங் பேருந்து நிறுத்தத்திலிருந்து பேரணியைத் தொடங்கிவைத்தாா்.
விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியபடி மாணவ, மாணவிகள் பேரணி சென்றனா். ராதாபுரம் சாலை வழியாக மீண்டும் பேருந்து நிலையத்தை பேரணி வந்தடைந்தது. அங்கு மாணவ, மாணவிகள் வில்லுப்பாட்டு, நாடகம் நடத்தினா். ஏற்பாடுகளை ஹெடெக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் சுரேஷ் தங்கராஜ் தாம்சன், நேரு நா்ஸிங் கல்லூரி முதல்வா் மாா்கரெட் ரஞ்சிதம் மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.