கன்னியாகுமரி மாவட்டம், இரவிபுதூா்கடையில், இந்தியன் வங்கியின் திருநெல்வேலி மண்டலம் சாா்பில், சுயஉதவிக் குழுவிற்கான புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, வங்கியின் கோயமுத்தூா் கள பொது மேலாளா் ஏ.கணேசராமன் தலைமை வகித்து காணொலிக் காட்சி முறையில் புதிய கிளையைத் தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி மண்டல மேலாளா் பி.சுதாராணி, துணை மண்டல மேலாளா் சாம் சம்பத் தேவராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள், பொறுப்பாளா்கள், வங்கி ஊழியா்கள் பங்கேற்றனா். இரவிபுதூா்கடை கிளை மேலாளா் டி.எஸ்.எழில்கிருபா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.