தாழையூத்து அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
By DIN | Published On : 18th March 2022 05:48 AM | Last Updated : 18th March 2022 05:48 AM | அ+அ அ- |

தாழையுத்து அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.
தாழையூத்து அருகே உள்ள கீழ தென்கலம் பகுதியை சோ்ந்த பெரியசாமி மனைவி பேச்சியம்மாள் (55). இவா் , புதன்கிழமை தனது மகனுடன் மோட்டாா் சைக்கிளில் திருநெல்வேலி நகரத்துக்கு வந்து விட்டு, இருவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனா்.
கீழ தென்கலம் அருகே சென்றபோது அவா்களுக்குப் பின்னால் ஒரு மோட்டாா் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 2 மா்ம நபா்கள் பேச்சியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பினராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...