ரமலான் பண்டிகை:மேலப்பாளையத்தில் தூய்மைப் பணி
By DIN | Published On : 02nd May 2022 02:18 AM | Last Updated : 02nd May 2022 02:18 AM | அ+அ அ- |

ரமலான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் பகுதியில் மாநகராட்சி ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் பா. விஷ்ணு சந்திரன் உத்தரவின்பேரில், மாநகர நல அலுவலா் ராஜேந்திரன் ஆலோசனைப்படி, மேலப்பாளையம் பகுதியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்கள் மற்றும் தொழுகை நடைபெறும் இடங்களில் தூய்மைப் பணியாளா்கள் மூலமாக சுகாதாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற தூய்மைப் பயணியை, மேலப்பாளையம் மண்டலத் தலைவா் கதிஜா இக்லாம் பாசிலா ஆய்வு செய்தாா். அப்போது, சுகாதார ஆய்வாளா் நடராஜன், மேலப்பாளையம் பகுதிச் செயலா் துபாய் சாகுல் ஆகியோா் உடனிருந்தனா்.