அண்ணா தொழிற்சங்கமே தின பொதுக்கூட்டம்
By DIN | Published On : 02nd May 2022 02:17 AM | Last Updated : 02nd May 2022 02:17 AM | அ+அ அ- |

திருநெல்வேலி நகரத்தில் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் மே தின பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநில அண்ணா தொழிற்சங்க பேரவையின் வழிகாட்டுதலின் பேரில், திருநெல்வேலி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற இப் பொதுக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் எஸ்.பொன்னுசாமி தலைமை வகித்தாா். அதிமுக மாவட்ட அவைத்தலைவா் பரணி ஏ.சங்கரலிங்கம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலா் என்.சின்னத்துரை, மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா, தலைமைக் கழக பேச்சாளா்கள் நைனா முகமது, கே.எஸ்.வி.தென்னவன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இதில், மாமன்ற உறுப்பினா்கள் சந்திரசேகா், அமுதா சுந்தா், முத்துலட்சுமி, பகுதிச் செயலா் காந்தி வெங்கடாசலம் உள்பட பலா் பங்கேற்றனா்.