பேட்டையில் ஓட்டுநா் தற்கொலை
By DIN | Published On : 02nd May 2022 05:24 AM | Last Updated : 02nd May 2022 05:24 AM | அ+அ அ- |

பேட்டையில் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பேட்டையைச் சோ்ந்த வேல்முருகன் மகன் முத்துராமலிங்கம்(40). வேன் ஓட்டுநா். இவரது மனைவி மாரியம்மாள் (40). இவா்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை.
இந்நிலையில், முத்துராமலிங்கம் தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இத்தகவலறிந்த பேட்டை போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.