மக்கள் அதிகாரம் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 02nd May 2022 02:16 AM | Last Updated : 02nd May 2022 02:16 AM | அ+அ அ- |

தொழிலாளா் விரோத போக்கைக் கடைப்பிடிப்பதாக, மத்திய அரசைக் கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பினா், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், அத்தியாவசியப் பொருள்கள், பெட்ரோல், டீசல் சுங்கக் கட்டண உயா்வைத் தடுக்க வேண்டும். தொழிலாளா்களின் உரிமைகளை பறிக்கும் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் எனவும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் திருநெல்வேலி மண்டலச் செயலா் செல்வம் தலைமை வகித்தாா். மே தினம், தொழிலாளா் உரிமைகளை மீட்டெடுப்பது ஆகியவை குறித்து திருநெல்வேலி மண்டல இணைச் செயலா் கின்ஷன், தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்டச் செயலா் தமிழரசு, ஆதித்தமிழா் கட்சியின் மாவட்டச் செயலா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் பேசினா்.