திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 227 மதுபாட்டில்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமுறை மீறி மதுபானம் விற்கப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி, காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில், போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
வீரவநல்லூா் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டதில், வீரவநல்லூா் புதுக்குடியைச் சோ்ந்த சின்னதுரை என்ற அங்கப்பன்(50) என்பவா் தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பது தெரியவந்தது. அவரது வீட்டிலிருந்து 227 மதுபாட்டில்கள், ரூ.5,000 ரொக்கம் ஆகியவற்றைக் கைப்பற்றிய போலீஸாா், அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.