நெல்லை மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு- கண்காணிப்புக் குழு கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, சா.ஞானதிரவியம் எம்.பி. தலைமை வகித்தாா். ஆட்சியா் வே.விஷ்ணு, மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.பழனி, மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சமூக உதவித் திட்டங்கள், அந்தியோதயா அன்னயோஜனா திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள், தேசிய நில ஆவணங்கள் கணினி மயமாக்கல் திட்டம், பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் சா.ஞானதிரவியம் எம்.பி. பேசுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்திவரும் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலன் கருதி விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்றாா்.

இதில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன், இணை இயக்குநா் வேளாண்மை கஜேந்திர பாண்டியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com