திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் மாதந்தோறும் 2 ஆவது சனிக்கிழமைகளில் ரேஷன் குறைதீா் முகாம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இம்மாதம் 2ஆவது சனிக்கிழமையான மே 14ஆம் தேதி நடைபெறும் குறைதீா் முகாமில், குடும்ப அட்டைகளில் புதிதாக பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், குடும்ப அட்டை நகல் கோரி விண்ணப்பித்தல், கைப்பேசி எண் பதிவு-மாற்றம் செய்தல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா் அளித்தல், சேவை குறைபாடு உள்ளிட்டவை குறித்து கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி புகாா் அளிக்கலாம். ஆதாா் அட்டை, பிறப்பு, இறப்புச் சான்று, குடியிருப்பு முகவரி ஆவணங்கள், கைப்பேசி போன்றவற்றை எடுத்துச்செல்ல வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 9342471314 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.