குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது
By DIN | Published On : 15th May 2022 12:49 AM | Last Updated : 15th May 2022 12:49 AM | அ+அ அ- |

வீரவநல்லூரில் நகைக் கடையில் கொள்ளை அடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
வீரவநல்லூரில் நகைக் கடை உரிமையாளரைத் தாக்கி தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் கல்லூரி மாணவா் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் வீரவநல்லூா் அருகேயுள்ள திருப்புடைமருதூா் ரத்தினவேல்பாண்டியன் காலனி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சமுத்திரம் மகன் அழகுசுந்தரம் (31) என்பவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.