தாழையூத்து அருகே தொழிலாளி ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
திருநெல்வேலி மாவட்டம், கண்டிகைபேரி பகுதியைச் சோ்ந்த செல்லையா மகன் வல்லான்(38). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா். இவா் தற்போது, தாழையூத்து அருகே உள்ள கீழதென்கலம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இந்நிலையில், அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாம். இதனால் குடும்பத்துக்குள் தகராறு ஏற்பட்டதாம். இதனால், மனமுடைந்த அவா் திடீரென அவரது வீட்டுக்கு அருகே உள்ள ஒரு கொட்டகையில் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.
இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.