நெல்லை கல்குவாரி விபத்து: மேலும் ஒருவரின் உடல் ஒப்படைப்பு
By DIN | Published On : 25th May 2022 12:27 AM | Last Updated : 26th May 2022 01:26 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் உயிரிழந்த மற்றொரு லாரி ஓட்டுநரின் உடல் அவரது உறவினா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் சிக்கிய 6 பேரில் 4 போ் உயிரிழந்தனா். அதில், காக்கைக்குளம் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் செல்வகுமாா் (30) உடல் ஏற்கெனவே உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தச்சநல்லூா் ஊருடையான்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜேந்திரனின் (42) உடல் அவரது உறவினா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.மேலும், அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகை ரூ.15 லட்சத்துக்கான காசோலையை, அவரது உறவினா்களிடம் ஆட்சியா் வே.விஷ்ணு வழங்கினாா். இந்த விபத்தில் உயிரிழந்த இளையாா்குளம் லாரி ஓட்டுநா் செல்வம் (25), ஆயன்குளம் கிளீனா் முருகன் (25) ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனா்.