அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சல் அஞ்சலகத்தில், அஞ்சல் வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் அஞ்சல் உபகோட்ட உதவிக் கண்காணிப்பாளா் பாலாஜி, மாணவா்களுக்கு அஞ்சல் துறை சாா்பில் வழங்கப்படும் பல்வேறு சேவைகள் குறித்து எடுத்துரைத்தாா். அஞ்சலகம் மூலம் அனுப்பப்படும் அஞ்சல்கள் பிரிக்கப்படும் முறை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
அஞ்சல் அலுவலா்கள், பணியாளா்கள், மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.