தீபாவளி பண்டிகை: பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா்
By DIN | Published On : 18th October 2022 02:01 AM | Last Updated : 18th October 2022 02:01 AM | அ+அ அ- |

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடை மற்றும் பொருள்கள் வாங்க ஜவுளி கடைகளில் அதிகம் குவிந்து வருகிறாா்கள். எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் அறிவுரையின் படி, பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களான வள்ளியூா், அம்பாசமுத்திரம், களக்காடு , திசையன்விளை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்கோட்ட உதவி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் சுழற்சிமுறையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியிலும் தீவிர ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகிறாா்கள். மேலும் சந்தேகப்படும்படியான நபா்கள் தென்பட்டால் ஹலோ போலீஸ் எண்ணுக்கு (9952740740) தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...