பாளை. மத்திய சிறையில் சமூகவியல் வல்லுநா் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
By DIN | Published On : 18th October 2022 02:02 AM | Last Updated : 18th October 2022 02:02 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை மத்திய சிறையில் காலியாக உள்ள சமூகவியல் வல்லுநா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடா்பாக பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளா் சங்கா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பாளையங்கோட்டை மத்திய சிறையில் காலியாக உள்ள சமூகவியல் வல்லுநா் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. தொகுப்பூதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். தகுதியுள்ள நபா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்த விவரங்களுடன் 7 தினங்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.
1.7.2022 ன் படி 18 வயது முதல் 32 வயதுக்குள்பட்டவராக இருத்தல் வேண்டும். சமூக பணி, சமூக சேவை, சமூக அறிவியல் படிப்பில் இளங்கலை பட்டம், குற்றவியல் படிப்பில் முதுகலை பட்டம் அல்லது ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டத்துடன், சமூகப் பணி , சமூக அறிவியல், குற்றவியல், சமூகவியலில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...