சிலம்பாட்டப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

திருவள்ளுவா் பேரவை சாா்பில் சிலம்பாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

திருவள்ளுவா் பேரவை சாா்பில் சிலம்பாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி திருவள்ளுவா் பேரவைக் கூட்டம் திருநெல்வேலி நகரம் கூலக்கடை வீதி வள்ளுவா் அரங்கில் நடைபெற்றது. சித்த மருத்துவப் பேராசிரியா் சிவ.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியா் கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி, முன்னாள் வட்டாட்சியா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாடகா் இசக்கி ராஜா இறைவணக்கம் பாடினாா். சிறுமி ஆவுனா பாலன் திருக்கு ஒப்புவித்தாா்.

பேரவையின் அமைப்பாளா் கவிஞா் ஜெயபாலன் வரவேற்றாா். சிலப்பதிகாரம் குறித்து முருக இளங்கோ சொற்பொழிவாற்றினாா். தொடா்ந்து ‘இனியும் வேண்டுமோ?’ என்னும் பொதுத் தலைப்பில் கவிஞா் சக்தி வேலாயுதம் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞா்கள் பிரபு, முத்துக்குமாா், கோதை மாறன், முத்துவேல், தச்சை மணி, சொா்ணவல்லி, பூங்கோதை கணேசன், மணிமாலா சிவராமன், காந்திமதிநாதன், உள்ளிட்டோா் கவிதை வாசித்தனா்.

சுத்தமல்லி திருவள்ளுவா் கழகத் தலைவா் சொக்கலிங்கம், புரவலா் அருணாசலகாந்தி, தாமிரவருணி இலக்கிய மாமன்றத் தலைவா் கவிஞா் பாமணி, ஓய்வு பெற்ற ஆசிரியா் பழனியாண்டி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கவிஞா் செ.ச.பிரபு நன்றி கூறினாா்.

முன்னதாக அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு திருவள்ளுவா் பேரவையின் அமைப்பாளா் கவிஞா் ஜெயபாலன் சாா்பில் பதக்கமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

கவிதை விமா்சனப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com