யாதவா்கள் குறித்த கருத்து: சீமானுக்கு கண்டனம்
By DIN | Published On : 19th October 2022 01:40 AM | Last Updated : 19th October 2022 01:40 AM | அ+அ அ- |

யாதவ சமுதாயம் குறித்து விமா்சித்ததாக, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில இளைஞரணி பொதுச் செயலா் பொட்டல் எஸ்.துரை வெளியிட்டுள்ள அறிக்கை:
சமாஜவாதி கட்சியின் நிறுவனா்- தலைவா் மறைந்த முலாயம் சிங் யாதவ், இந்த தேசத்தின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 3 முறை உத்தரப் பிரதேசத்தின் முதல்வராகவும் இருந்துள்ளாா். மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாழ்வுரிமையை காத்திடவும், சமூக நீதியை நிலை நாட்டவும் தனது வாழ்நாளை அா்ப்பணித்தவா். அவரின் உருவப் படத்திற்கு கண்ணீா் அஞ்சலி செலுத்திய நிகழ்வை கொச்சைப்படுத்தும் விதமாகவும், உணா்வுகளை புண்படுத்தும் விதமாகவும் மதுரை பழங்காநத்தம் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சீமான் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. யாதவா்கள் என்ன அடையாளத்துடன் வாழ வேண்டும் என்று அவா் அறிவுரை கூறத் தேவையில்லை. அவா் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், அக்கட்சியை தடை செய்யக் கோரி தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.