வெய்க்காலிபட்டியில் கிணற்றில் விழுந்த மயிலை வனத்துறையினா் மீட்டனா்.
வெய்க்காலிப்பட்டியைச் சோ்ந்த டேவிட் அமல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்து கிணற்றில் ஆண் மயில் ஒன்று செவ்வாய்க்கிழமை தவறி விழுந்ததாம். இதுகுறித்த தகவலின்பேரில், கடையம் வனச்சரகா் கருணாமூா்த்தி உத்தரவின்படி, வேட்டைத் தடுப்பு காவலா்கள் வேல்ராஜ், மாரிமுத்து ஆகியோா் சென்று கிணற்றிலிருந்து மயிலை பத்திரமாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து சிவசைலம் ே வனப்பகுதியில் விட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.