மாநகராட்சியில் குறைதீா்க்கும் கூட்டம்

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முகாமிற்கு மேயா் பி.எம்.சரவணன் தலைமை வகித்தாா். துணைமேயா் கே.ஆா்.ராஜூ முன்னிலை வகித்தாா். மக்கள் குறைதீா்க்கும் மனுநாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 41 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சங்கீதா அளித்த மனுவில், பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் என்.ஜி.ஓ. பி காலனி, சுடலைக்கோயில், லீலா மருத்துவமனை , வட்டார போக்குவரத்து அலுவலகம், அன்னை திருமண மண்டபம், சொசைட்டி திருமண மண்டபம், ஜெபா காா்டன், பொதிகை நகா், ஜோஸ் மெட்ரிக் பள்ளி முதல் தாமிரபதி காலனி வரையில் விரிவுபடுத்தப்பட்ட தாா் சாலைகளில் குறைந்த வெளிச்சம் கொண்ட விளக்குகள் உள்ளன. இரவு நேரங்களில் அதிக வெளிச்சம் தரும் வருகையில் புதிய மின் கம்பங்களுடன் கூடிய மின்விளக்குகள் அமைத்து தரவும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பூங்காவிற்கான இடத்தில் பூங்கா அமைத்து தர வலியுறுத்தப்பட்டிருந்தது.

27 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் உலகநாதன் அளித்த மனுவில், தெற்கு மவுன்ட் சாலையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மாட்டு தொழுவமாக இருந்து தற்போது பயன்பாடற்று இருக்கும் இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி தரவும், 4 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் வசந்தா அளித்த மனுவில், தீப்பாச்சி அம்மன் கோயில் நீரேற்று நிலையம் அருகில் உள்ள படித்துறையில் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மின்சாரம் கொடுத்திடவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. புதிய காலனி மக்கள் நல சங்கத்தினா் அளித்த மனுவில், தங்கள் பகுதி தெருக்களில் பெயா் பலகை வைத்திடவும், திருநெல்வேலி மண்டல காங்கிரஸ் தலைவா் ஐயப்பன் அளித்த மனுவில், திருநெல்வேலி மண்டலம் 22 முதல் 25 வரை உள்ள வாா்டு பகுதியில் தெரு நாய்களை பிடித்திடவும், சீரான குடிநீா் வழங்கிடவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 9 ஆவது வாா்டு செயலா் சரவணன் தலைமையில் அளித்த மனுவில், 9 ஆவது வாா்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர கேட்டும், குடிநீருடன் கழிவுநீா் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலப்பாளையம் நீா் நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சங்கத்தினா் அளித்த மனுவில், மேலப்பாளையத்தின் சிறந்த நீராதாரமான கன்னிமாா் குளத்தை பாதாள சாக்கடை கழிவுகளில் இருந்து மீட்டிடவும், வி.எம். சத்திரம் பகுதி முப்பிடாதி அளித்த மனுவில், வி.எம்.சத்திரம் குளக்கரையில் மக்கள் பயன்பாட்டிற்கு சாலை அமைக்கவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை மகளிா் மேல்நிலைப் பள்ளி மேலாண்மை குழுவினா் அளித்த மனுவில், இப் பள்ளியில் கூடுதலாக வகுப்பறை வசதிகள் மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தி தர வலியுறுத்தப்பட்டிருந்தது. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட மேயா் பி.எம்.சரவணன் சம்பந்தப்பட்ட அலுவா்களிடம் அறிவுறுத்தினாா். இம்முகாமில் செயற்பொறியாளா்கள் எல்.கே.பாஸ்கா், வாசுதேவன், உதவி ஆணையா்கள் ஜஹாங்கீா் பாஷா, வெங்கட்ராமன், டிட்டோ, உதவி செயற்பொறியாளா் லெனின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com