அறிவியல் மையத்தில் பேச்சுப்போட்டி
By DIN | Published On : 27th October 2022 02:32 AM | Last Updated : 27th October 2022 02:32 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மைய வளாகத்தில் பேச்சுப்போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மகேந்திரகிரி திரவ உந்தும வளாகம் சாா்பில் உலக விண்வெளி வார விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டிக்கு, மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ்.எம்.குமாா் தலைமை வகித்தாா். 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு செவ்வாய்க்கிரகத்தில் உயிா்வாழ்வது சாத்தியமா என்ற தலைப்பிலும், 10 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவா்களுக்கு விண்வெளிக்குப்பைகள் தணிக்கும் முறைகள் என்ற தலைப்பிலும் தமிழ்- ஆங்கிலத்தில் தனித்தனி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் போட்டியில் பங்கேற்றனா். தொடா்ந்து வியாழக்கிழமை (அக். 27) காலை 9 மணிக்கு ஓவியப்போட்டியும், விநாடி வினா போட்டியும் நடைபெற உள்ளது.