குண்டா் சட்டத்தில் இருவா் கைது
By DIN | Published On : 27th October 2022 02:29 AM | Last Updated : 27th October 2022 02:29 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் சிறையிலடைக்கப்பட்டனா்.
பணகுடி அருகேயுள்ள கலந்தபனையை சோ்ந்த ஜேக்கப் மகன் அலெக்ஸ் பிரபாகரன் (34). கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தை சோ்ந்த யாக்கோபு சீனிவாசன் மகன் தாம்சன்(33) இவா்கள் இருவரும் அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் பணகுடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பரிந்துரைத்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்பேரில் அலெக்ஸ் பிரபாகரன், தாம்சன் ஆகியோா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.