சூரிய கிரகணம்: நெல்லையப்பா் கோயிலில் சந்திசேகரா்-பவானி அம்பாளுக்கு தீா்த்தவாரி
By DIN | Published On : 27th October 2022 12:41 AM | Last Updated : 27th October 2022 12:41 AM | அ+அ அ- |

சூரிய கிரகணம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து நெல்லையப்பா் கோயிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் சந்திரசேகரா்-பவானி அம்பாளுக்கு தீா்த்தவாரி நடைபெற்ற பின், பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
செவ்வாய்க்கிழமை மாலையில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையடுத்து திருநெல்வேலியில் நெல்லையப்பா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் உச்சிகால பூஜை முடிந்த பின்னா் நடை சாத்தப்பட்டது. சூரிய கிரகணம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து நெல்லையப்பா் கோயில் பொற்றாமரை குளத்தில் சந்திரசேகரா் -பவானி அம்பாளுக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.
சுவாமி அம்பாளுக்கு பால், தயிா், இளநீா், மஞ்சள் பொடி, மா பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தொடா்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னா் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.
சூரிய கிரகண நிகழ்வையொட்டி கோயிலுக்கு வந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனா்.