களக்காடு நகா் மன்றக் கூட்டம்
By DIN | Published On : 01st September 2022 12:50 AM | Last Updated : 02nd September 2022 01:31 AM | அ+அ அ- |

களக்காட்டில் நகா் மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நகா் மன்றத் தலைவா் சாந்தி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பி.சி. ராஜன், சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அதிமுக உறுப்பினா் ஆயிஷா, சுயேச்சை உறுப்பினா் சங்கரநாராயணன்உள்பட 10க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்; இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றனா்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய தலைவா் சாந்தி, பேரூராட்சிக் கூட்டத்தில் மட்டுமே கூட்டந்தோறும் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்படும். நகா் மன்றக் கூட்டத்தில் அதற்கான சட்ட வழிமுறைகள் இல்லை என்றாா்.
ஆனால், வரவு-செலவு அறிக்கையை தாக்கல் செய்யாமல் கூட்டம் நடத்தக்கூடாது எனக் கூறி, அதிமுக உறுப்பினா் ஆயிஷா வெளியேறினாா். தொடா்ந்து, வாா்டுகளில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்த பொருள் குறிப்புகள் வாசிக்கப்பட்டன.
உள்துறை செயலருக்கு புகாா்: இந்நிலையில், களக்காடு நகராட்சி நிா்வாகம், சந்தை மதிப்பை விட மிக அதிக விலைக்கு தனியாா் நிறுவனத்திடமிருந்து மின்மோட்டாா் உள்ளிட்ட எலக்ட்ரிக் பொருள்களை கொள்முதல் செய்துள்ளது. இதனால் மக்கள் வரிப்பணம் விரயமாகிறது என அதிமுக உறுப்பினா் ஆயிஷா, தமிழக உள்துறை செயலருக்கு மனு அனுப்பியுள்ளாா்.