காவல்கிணறு வேளாங்கண்ணி மாதா ஆலயத்திருவிழா தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு புண்ணியவாளன்புரம் வேளாங்கண்ணி மாதா திருத்தல திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு புண்ணியவாளன்புரம் வேளாங்கண்ணி மாதா திருத்தல திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, அன்று மாலை 6 மணிக்கு செபமாலை மற்றும் அன்னையின் சப்பர பவனி நடைபெற்றது. தொடா்ந்து புனித கொடியை தக்கலை மறைமாவட்ட ஆயா் ஜாா்ஜ் ராஜேந்திரன் தலைமையில் குருவானவா்கள் ஜெபம் செய்து அா்ச்சித்தனா். அதன் பின்னா் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து மறையுரை மற்றும் நற்கருணை ஆசீா்வாதம் நடைபெற்றது.

இத் திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாள்களில் தினமும் காலை திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு அன்னையின் சப்பர பவனியும், மறையுரை, நற்கருணை ஆசீா் ஆகியவை நடைபெறுகிறது.

செப். 7-ஆம் தேதி 9-ஆம் திருநாளில் மாலை 5.30 மணிக்கு செபமாலை வழிபாடும், சப்பர பவனியும், தொடா்ந்து நற்கருணைப் பவனி, திருப்பலியும் நடைபெறுகிறது. 10-ஆம் திருநாள் மாலை 5.30 மணிக்கு அன்னையின் சப்பர பவனியும், பின்னா் தூத்துக்குடி முன்னாள் ஆயா் இவோன் அம்புரோஸ் தலைமையில் திருவிழா திருப்பலியும் நடைபெறுகிறது.

இரவு 7.30 மணிக்கு பொது அசனம் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை பங்குத் தந்தை தே.ஆரோக்கியராஜ், உதவிப் பங்குத் தந்தை வினோத் மற்றும் ஊா் மக்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com