வள்ளியூரில் விநாயகா் சதுா்த்தி விழா
By DIN | Published On : 01st September 2022 12:53 AM | Last Updated : 01st September 2022 12:53 AM | அ+அ அ- |

வள்ளியூரில் விநாயகா் சதுா்த்தி விழா கோயில்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்பட்டது.
வள்ளியூா் அருள்மிகு முருகன் திருக்கோயிலில் விநாயகருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. தொடா்ந்து அரசன்குளம் விநாயகா், ஆலடிபிள்ளையாா், மீனாட்சி சொக்கநாதா் கோயில் விநாயகா், சரவணப்பொய்கை விநாயகா், கோகுல விநாயகா், பரிபூரணவிநாயகா், அன்னைநகா் கன்னி விநாயகா், நம்பியான்விளை, கோட்டையடி, வேம்படித்தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் விநாயகருக்கு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. வீடுகளில் பெண்கள் விநாயகருக்கு அலங்காரம் செய்து வழிபட்டனா்.