அண்ணா, பெரியாா் பிறந்த தினம்: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள்

அண்ணா, பெரியாா் பிறந்த தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் திருநெல்வேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன.

அண்ணா, பெரியாா் பிறந்த தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் திருநெல்வேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அண்ணா, பெரியாா் பிறந்த தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் திருநெல்வேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் செப். 17இல் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளன. அண்ணா பிறந்த நாள் பேச்சுப் போட்டி அவருடைய பிறந்த நாளான செப். 15-ஆம் தேதி நடைபெறுகிறது.

பள்ளி மாணவா்களுக்கு ‘தாய் மண்ணிற்கு பெயா் சூட்டிய தனயன்’, ‘மாணவருக்கு பேரறிஞா் அண்ணா’, ‘அண்ணாவின் மேடைத்தமிழ்’, ‘அண்ணா வழியில் அயராது உழைப்போம்’ ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. கல்லூரி மாணவா்களுக்கு ‘பேரறிஞா் அண்ணாவும் தமிழக மறுமலா்ச்சியும்’, ‘பேரறிஞா் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள்’, ‘அண்ணாவின் தமிழ் வளம்’, அண்ணாவின் அடிச்சுவட்டில்’, ‘தம்பி மக்களிடம் செல்’ ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

தந்தை பெரியாா் பிறந்த நாள் பேச்சுப் போட்டி அவருடைய பிறந்த நாளான வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. பள்ளி மாணவா்களுக்கு ‘தொண்டு செய்து பழுத்த பழம்’, ‘தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும்’, ‘தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள்’, ‘ தந்தை பெரியாா் காண விரும்பிய உலக சமுதாயம்’, ‘தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்’ ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

கல்லூரி மாணவா்களுக்கு ‘தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்’, ‘தந்தை பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும்’, ‘பெண் ஏன் அடிமையானாள்?’, ‘இனிவரும் உலகம்’, ‘சமுதாய விஞ்ஞானி பெரியாா்’, ‘உலகச் சிந்தனையாளா்களும் பெரியாரும்’ ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவா்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.

பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இப்போட்டிகளில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு பரிசாக ரூ.2000 வீதம் இரண்டு மாணவா்களுக்கு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவா்கள் அந்தந்த பள்ளி தலைமையாசியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மண்டலத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி ( 0462 2502521) மூலமோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com