நெல்லையில் இன்று போக்குவரத்து மாற்றம்

அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள நிலையில், திருநெல்வேலி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள நிலையில், திருநெல்வேலி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வா் நிகழ்ச்சியின் காரணமாக திருநெல்வேலியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வியாழக்கிழமை காலை 6 மணி முதல் அனைத்து கனரக வாகனங்களும் தாழையூத்து அணுகு சாலை, தூத்துக்குடி அணுகு சாலை, திருச்செந்தூா் சாலை, ஐஆா்டி சந்திப்பு, சேரன்மகாதேவி சாலை, சுத்தமல்லி விலக்கு, தென்காசி சாலை, கண்டியப்பேரி விலக்கு வழியாக செல்ல வேண்டும். ‘

வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் சீனிவாசநகா் சந்திப்பில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு மற்றும் அரசு மருத்துவமனை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் செல்லும் அனைத்து வாகனங்களும் ஐஓபி காலனி பாலம், ராஜகோபாலபுரம் பாலம் வழியாகச் செல்ல வேண்டும். பொட்டல் விலக்கில் இருந்து மாா்க்கெட் செல்லும் வாகனங்கள் சீனிவாசநகா் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

சீவலப்பேரி சாலையில் இருந்து திருநெல்வேலி சந்திப்புக்கு செல்லும் வாகனங்கள் சீனிவாச நகா் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். கண்டிகைப்பேரி பிரிவில் இருந்து கனரக வாகனங்கள தச்சநல்லூா் வழியாக செல்ல வேண்டும். சுத்தமல்லி பிரிவில் இருந்து கனரக வாகனங்கள் அம்பாசமுத்திரம் சாலை வழியாக செல்ல வேண்டும்.

புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி சந்திப்புக்கு செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, அறிவியல் மையம் வழியாக செல்ல வேண்டும். திருநெல்வேலி சந்திப்பில் இருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக சாலை, மேலப்பாளையம் குறிச்சி ரிலையன்ஸ் ரவுண்டானா வழியாகச் செல்ல வேண்டும்.

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்தும், தெற்கு பஜாரில் இருந்தும் திருநெல்வேலி சந்திப்புக்கு செல்லும் வாகனங்கள் ம் திருநெல்வேலி சந்திப்புக்கு செல்லும் வாகனங்கள் மேலப்பாளையம் குறிச்சி ரிலையன்ஸ் ரவுண்டான வழியாக செல்ல வேண்டும். சாந்தி நகரில் இருந்து திருநெல்வேலி சந்திப்புக்கு செல்லும் வாகனங்கள் நான்குவழிச் சாலை வழியாக அருகன்குளம், சேந்திமங்கலம் (நெடுஞ்சாலை- 44) பாதையில் செல்ல வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com