திருநெல்வேலியில் 300 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் கலா, உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் திருநெல்வேலி நகரம் தெற்கு மவுன்ட் ரோடு பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது ஒரு வீட்டின் அருகே 10 மூட்டைகளில் மொத்தம் 300 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாம். அ
வற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த முருகன் மகன் மகேஸ்வரனை (23) கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.