அம்பாசமுத்திரம் சின்ன சங்கரன்கோயில் அருகே தாமிரவருணி ஆற்றில் சனிக்கிழமை குளிக்கச் சென்ற பொறியியல் கல்லூரி மாணவா் மாயமானாா்.
தென்காசி சொா்ணபுரம் தெருவைச் சாா்ந்த ஜெய்னுலாப்தீன். தற்போது பொட்டல்புதூரில் வசித்து வரும் இவரது இரண்டாவது மகன் ரஜப் மீரான் சனிக்கிழமை நண்பா்களுடன் அம்பாசமுத்திரம் சின்ன சங்கரன் கோயில் அருகே தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது, ஆற்றில் மூழ்கினாராம்.
தகவலறிந்த தீயணைப்பு மீட்புப் படையினா் வந்து இரவு வரை தேடினா். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை தேடும்பணியில் ஈடுபட உள்ளனா்.
மின்னல் பாய்ந்து பெண் பலி:
அம்பாசமுத்திரம் முடப்பாலம் பகுதியைச் சோ்ந்த சுடலை மனைவி வெள்ளையம்மாள் (51). இவா் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா். சனிக்கிழமை மாலை பணி முடிந்து வயல் வழியாக வீட்’டுக்குச் செல்லும்போது இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் வெள்ளையம்மாள் மீது மின்னல் பாய்ந்ததில் அதே இடத்தில் உயிரிழந்தாா்.
இந்த இரு சம்பவங்கள் குறித்து அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.