நெல்லையில் சுதந்திர நாள்: ரூ.27 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கல்

சுதந்திர நாள் விழாவில்  ஆட்சியர் கா.ப .கார்த்திகேயன் தேசியக் கொடியேற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நெல்லையில் சுதந்திர நாள்: ரூ.27 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கல்
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ. உ. சிதம்பரனார் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில்  ஆட்சியர் கா.ப .கார்த்திகேயன் தேசியக் கொடியேற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து பல்வேறு துறைகளின் கீழ்  60 பயனாளிகளுக்கு ரூ. 27 லட்சத்து 28 ஆயிரத்து 202 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு  துறை சார்ந்த 257 நபர்களுக்கு நற்சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சபீர் ஆலம், திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்  பிரவேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com