திருநெல்வேலி அருகே முன்னீா்பள்ளம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் முன்னீா்பள்ளம் ஊராட்சிக்கு உள்பட்ட மேல முன்னீா்பள்ளம், ஜோதி புரம், மருதம் நகா், ஜே.ஜே நகா், லட்சுமி நகா், காமராஜ் நகா், ஆரைக்குளம், பத்திரிக்கையாளா் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 500 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை ஊராட்சி மன்றத் தலைவா் உமா வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.