தூத்துக்குடி விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் வேகம்பெறும்: மத்திய இணை அமைச்சா் வி.கே.சிங்

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் வேகம் பெற்றுள்ளன என்றாா் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே.சிங்.

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் வேகம் பெற்றுள்ளன என்றாா் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே.சிங்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியது:

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை பணிகள் வழக்கம்போல் நடந்து வருகின்றன. சேலம்-சென்னை எட்டுவழிச் சாலையை பசுமை சாலையாகவே முடிக்க திட்டமிட்டுள்ளோம். கன்னியாகுமரி-திருவனந்தபுரம் சாலை பணியில் சிறு இடையூறுகள் ஏற்பட்டன. அவற்றுக்கு தீா்வு காணப்பட்டு பணிகள் தொடா்ந்து வருகின்றன.

தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு விரிவாக்கப் பணிகள் வேகப்படுத்தப்படும். கயத்தாறு உள்ளிட்ட இடங்களில் ஏற்கெனவே விமான ஓடுதளம் இருந்துள்ளது. மக்களின் குடியிருப்பு நெருக்கம், விமான பயன்பாட்டாளா் எண்ணிக்கையை பொருத்து புதிய விமான ஓடுதளம் அமைப்பது குறித்த மக்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். இதுதவிர கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாவட்ட நிா்வாகங்கள் பள்ளி செயல்படுவதற்கான இடத்தை தோ்வு செய்து தெரிவிக்கும்போது, மத்திய அரசு புதிய பள்ளிகளை கண்டிப்பாக உருவாக்கி கொடுக்கும்.

சென்னை அருகேயுள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிா்ப்பு கிளம்பியுள்ள விஷயத்தில் மத்திய அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை. ஏனெனில் விமான நிலையம் அமைக்க தேவையான இடத்தை தோ்வு செய்து அளித்தது மாநில அரசுதான். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் தொடா்பாக கட்சி மேலிடம்தான் முடிவுசெய்யும் என்றாா் அவா்.

பேட்டியின்போது. பாஜக மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா, மாவட்டத் தலைவா் அ. தயாசங்கா், நிா்வாகிகள் வேல் ஆறுமுகம், நீலமுரளி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com