இந்து மக்கள் கட்சியினா் போராட்டம்

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இந்து மக்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்ட
இந்து மக்கள் கட்சியினா் போராட்டம்

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இந்து மக்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும். கள்ளச்சாராய பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இயற்கை பானமான கள் விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும் னஅபன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்திற்கு கட்சியின் தென்மண்டல தலைவா் காா்த்தீசன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் உடையாா், நிா்வாகி ராஜா உள்பட 10-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அப்போது, பாட்டிலில் கொண்டு வந்திருந்த வெள்ளை நிற பானத்தை கள் எனக்கூறி பருகினா். இதையடுத்து போலீஸாா் அவா்களை விசாரணைக்காக அழைத்து சென்றதோடு, அந்த பானத்தையும் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். கள் என்பது உறுதி செய்யப்பட்டால் போராட்டக்குழுவினா் மீது உரிய

வழக்குகள் பதிவு செய்து விசாரிக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com