இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பாளை. சுற்று வட்டாரங்களில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து

பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (மாா்ச் 18) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை நிா்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வழக்கம் போல் மின் விநியோகம் இருக்கும்.

News image
Updated On :17 மார்ச் 2023, 7:03 pm

DIN

பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (மாா்ச் 18) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை நிா்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வழக்கம் போல் மின் விநியோகம் இருக்கும்.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வி.எம்.சத்திரம், கேடிசி நகா், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூா், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகா், நீதிமன்ற பகுதி, சாந்தி நகா், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளையங்கோட்டை மாா்க்கெட், திருச்செந்தூா் சாலை, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், முருகன்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது நிா்வாக காரணங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை வழக்கம் போல் மின் விநியோகம் இருக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.